SIVAKASI BLAST KILLS 40 PEOPLE -
(If possible please drop your tears for them .....)
(If possible please drop your tears for them .....)
சிவகாசி சாம்பல்
வாழும் போதும்
எரிந்தோம் !
வயிற்றுப் பசியால்
வறுமை நிலையால்
கந்தகக் கனலால்
மருந்துப் புனலால்
வெடியோடு விளையாடி,
வெடியோடு உறவாடி
நித்தம் நொந்த
வெந்த வாழ்க்கை
இன்று
எரிந்து இறந்தோம்
இறந்து எரிந்தோம் !!!.......
எங்கள் திரியே
எங்களுக்கு கொள்ளியாய் !
எங்கள் காகிதமே
எங்களுக்கு பாதகமாய் !
எங்கள் மருந்தே
எங்களுக்கு வாக்கரிசியாய்
எங்கள் வெடியே
எங்கள் வாழ்வின்
இறுதிப் படியாய் !
நாங்கள் வளர்த்த
அக்னி யாகத்தில்
நாங்களே அர்ப்பணமாய் i
நாங்களே சமர்ப்பணமாய்
எங்கள் வாழ்வின் சாதனையாய்
வாரிய சாம்பலே மிஞ்சும்
வாரிய சாம்பலே எஞ்சும்
இப்போதாவது முடிந்தால்
உங்கள் கண்ணீரால்
எங்கள் வெப்பம்
தணியுங்கள் !
வாழும் போதும்
எரிந்தோம் !
வயிற்றுப் பசியால்
வறுமை நிலையால்
கந்தகக் கனலால்
மருந்துப் புனலால்
வெடியோடு விளையாடி,
வெடியோடு உறவாடி
நித்தம் நொந்த
வெந்த வாழ்க்கை
இன்று
எரிந்து இறந்தோம்
இறந்து எரிந்தோம் !!!.......
எங்கள் திரியே
எங்களுக்கு கொள்ளியாய் !
எங்கள் காகிதமே
எங்களுக்கு பாதகமாய் !
எங்கள் மருந்தே
எங்களுக்கு வாக்கரிசியாய்
எங்கள் வெடியே
எங்கள் வாழ்வின்
இறுதிப் படியாய் !
நாங்கள் வளர்த்த
அக்னி யாகத்தில்
நாங்களே அர்ப்பணமாய் i
நாங்களே சமர்ப்பணமாய்
எங்கள் வாழ்வின் சாதனையாய்
வாரிய சாம்பலே மிஞ்சும்
வாரிய சாம்பலே எஞ்சும்
இப்போதாவது முடிந்தால்
உங்கள் கண்ணீரால்
எங்கள் வெப்பம்
தணியுங்கள் !
No comments:
Post a Comment